திடீர் உச்சத்திற்கு சென்றுள்ள ரணில்! நிலைமை எப்படியும் மாறலாம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்தமை தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் இதேபோன்று நடந்தால் எந்த உதவியும் கிடைக்காது! ரணிலை எச்சரித்த ஜப்பான் |
புதிய ஜனாதிபதி
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின் போது கட்சிகளின் உறுப்பினர்கள், தமது கட்சிகள் மீது வைத்திருக்கும் விசுவாசம் எவ்வளவு மங்கலாக உள்ளது என்பதை அம்பலமாக்கியுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார். அவர் அரசியலின் உச்சத்திற்கு ஏறியுள்ளார்.
இருப்பினும், அவரது உடனடி முன்னோடிக்கு என்ன நடந்தது என்பதைக் கருத்தில் கொண்டு உயர் பதவியின் நிலையற்ற தன்மை வரலாற்றில் ஒருவரின் இடம் எப்படி அடிக்கடி மாறும் என்பதை அவர் நினைவில் கொள்ளவேண்டும்.
தாக்குதல் முன்னெடுத்தமை
அமைதியான எதிர்ப்பாளர்களை அழிக்க வெள்ளிக்கிழமை விடியற்காலை தாக்குதல் நடத்தியமை மனித உரிமைப் பாதுகாவலர்களுக்குப் பிடிக்கவில்லை.
இதன் காரணமாக, பலர் புதிய ஜனாதிபதியின் மீது நம்பிக்கை குறைபாட்டை கொண்டுள்ளனர். அதனை சரி செய்து பொதுமக்களின் கருத்துக்கு அவர் செவிசாய்க்க வேண்டும்.
மேலும் அவர் ஒருபோதும் முழு பதவிக் காலத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.
தாம் மற்றவர்களைப் போல குழந்தைகளை முத்தமிடும் அரசியல்வாதி அல்ல, குழந்தைகளுக்கு பால் உணவை பெற்றுக்கொடுக்கும் அரசியல்வாதி என ரணில் விக்ரமசிங்க முன்னர் கூறியிருந்தமையை நினைவூட்டியுள்ள ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியர் தலையங்கம், அதை நிரூபிக்க இப்போது சிறந்த நேரம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
நான்கு ராஜபக்சர்களின் பாதுகாப்புக்கான உருவாக்கமே ஜனாதிபதி ரணில்
ரணில் விக்ரமசிங்க கடந்த 20ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னணியில் இடம்பெற்ற சம்பவங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
பொதுவாக ராஜபக்சர்களுக்கு ஆதரவாளர்கள் என்று கூறப்படும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படுவது தமது இருப்புக்கு முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டே, ராஜபக்சர்கள் ரணிலுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் தாம் ராஜபக்சர்களின் நண்பர் இல்லையென்றும், பொதுமக்களின் நண்பர் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அவருடைய வெற்றிக்குப் பின்னால் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கடுமையாக உழைத்ததை ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல்களாக வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி, அமெரிக்காவுக்கு செல்ல முயற்சித்து அதில் தோல்வி கண்ட பசில் ராஜபக்ச,அந்த தோல்விக்கு மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதில் முனைப்புகாட்டியுள்ளார்.
அவர் தமது கட்சியில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆவணங்களையும் தம்வசம் வைத்திருக்கின்றார். இதனடிப்படையிலேயே, அவர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தொலைபேசியின் ஊடக பேச்சு நடத்தி, ரணிலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச தமது விசுவாசிகளிடம் ரணில் விக்ரமசிங்கவுக்காக பிரசாரம் செய்துள்ளார். நாமல் ராஜபக்சவும் பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை திரட்டியுள்ளார்.
அதற்கப்பால் தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோருடன் பேசி தமக்கு வழங்குமாறும் கோரினார்.
இதன்போது கடந்த மே 9ஆம் திகதி வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்ற உறுதிமொழியை ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
அத்துடன் அவர்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலனவர்கள் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க உடன்பட்டிருந்தனர்.
இதற்கப்பால் இந்த வாக்களிப்புக்காக பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டலஸ் அழகப்பெரும ராஜபக்சர்களின் நண்பர் என்ற போதும் கடந்த பிரதமர் தெரிவின்போது தம்மை புறக்கணித்து ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கும் ராஜபக்சர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் ஜனாதிபதியானால் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று ராஜபக்சர்கள் பயந்த நிலையிலேயே அவர்களின் ரணிலுக்கு ஆதரவளித்துள்ளனர். மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலை தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தாம் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலக முடிவெடுத்தமையை அடுத்து, கட்சியின் சிலர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவும் தனிப்பட்ட முறையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் ரணில் விக்ரமசிங்க உறுதி மொழிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கை சேர்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்கள் கட்சித் தலைமையின் தீர்மானங்களையும் அவர்களின் மீறி உள்ளார்கள் எனினும் ரகசிய வாக்கெடுப்பு என்பதால் யார் யாருக்கு வாக்களித்தனர் என்ற விடயம் தெரிய வரவில்லை.