நாமல் ராஜபக்சவுக்கு மற்றுமொரு புதிய பதவி
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் மற்றும் நிறுவனங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இலங்கை - பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை - பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் குழுவை தெரிவு செய்யும் விசேட கூட்டம் நேற்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றிருந்தது.
இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதிகளவான வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ச சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்த்து மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri