ரோசி சேனாநாயக்கவுக்கு புதிய பதவி அறிவிப்பு
உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், ரோசி சேனாநாயக்க தனது பதவியிலிருந்து விலகினார்.
ரோசி சேனாநாயக்க, 2001-2004 வரை மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக பதவி வகித்துள்ளார். மேலும், 2009-2010 வரை மேல் மாகாண சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.
மீண்டும் மேயர் பதவிக்கு அழைப்பு
2015ஆம் ஆண்டு குழந்தைகள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்த அவர், பிரதமரின் செய்தித் தொடர்பாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், கொழும்பு - மாநகரசபையின் மேயராகவும் ரோசி சேனாநாயக்க இருந்துள்ளார்.
அவரை, மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிய போதிலும், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் ஆலோசகர்
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் அவர் இந்த தீர்மானத்தில் சற்று தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இவ்வாறான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை நியமிக்க ஜலானி பிரேமதாசவின் ஆதரவுடன் சிலர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
