பெருந்தோட்டத் துறைக்கு நிலையான வருவாயை உறுதி செய்ய புதிய திட்டம்
பெருந்தோட்டத் துறைக்கு நிலையான வருவாய் மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரங்களின் நீடித்த நிலையை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.
இறுதி திட்டத்தின் 1105 ரூபா நாள் மொத்த வேதனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநரம் உற்பத்தித்திறன் மற்றும் ஊக்க கொடுப்பனவு என்பன மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி அடிப்படை ஊதியம் 700 ரூபா, ஊழியர் சேமலாப நிதிக்கொடுப்பனவு 105 ரூபா, வருகை ஊக்கத்தொகை ரூ.150 மற்றும் உற்பத்தித்திறன் ஊக்கத்தொகை ரூ.150 என்று வகுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் மாத வருமானத்தில் 6,250 ரூபா அதிகரிப்பு ஏற்படும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam