யாழில் கடற்கரையில் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க புதிய திட்டம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக்.சி.ஏ.தனபால இன்று (19.04.2024) திறந்துவைத்தார்.
கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது.
இதன்போது அப்பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |