வடமாகாணத்தில் குற்றச்செயல்களை தடுக்க புதிய திட்டம்
வடமாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக சமூக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக பொலிஸ் துறையினர் என்ற பெயரில் செயற்படவுள்ள இந்தத் திட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்தத் செயற்பாடு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் மேற்பார்வையின் கீழ், வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில் செயல்படுத்தப்படுகின்றது.
இந்த அணிகளைத் தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
