இலங்கையில் மற்றுமொரு முதலீட்டு திட்டத்தை ஆரம்பித்த சீனா
நாளொன்றுக்கு 4 தொன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம் சீன முதலீடாக இலங்கையில் நிறுவப்படும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் தெரிவித்துள்ளார்.
அஸ்கிரி மகா விகாரைக்கு நேற்றையதினம்(25.06.2023) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சீன தூதுவர் மல்வத்து அஸ்கிரி உபய மகா விகாரையின் மகாநாயக்க தேரர் முன்னிலையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அறுபதுகளில் நிர்மாணிக்கப்பட்டதாகவும், சீன முதலீடாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் எரிபொருள் விநியோகத் துறையில் பல பாரிய மாற்றங்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
மேலும், இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாட்டை ஆரம்பிக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
