புதிய வாகன இலக்கத் தகடு குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
புதிய வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களும் நவீன தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்ட புதிய வாகன இலக்க தகடுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் எண் பலகைகள் இன்றி பல வாகனங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக, கடந்த 10 வருடங்களாக மோட்டார் வாகனத் திணைக்களம் மேம்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
வாகன இலக்கத் தகடுகள் இன்றி உள்ள வாகனங்களுக்கு அடுத்த வாரத்திலேயே தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வாய்மொழிமூல கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
