புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் தகவல்
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதிவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை இன்னும் சில மணி நேரங்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நேற்றைய தினம் முதல் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கு நடுவில் பதவி விலகள் மற்றும் நியமனங்கள் தொடர்பான பல தகவல்களும் வெளியாகி வருகின்றன.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
