யாழ்.ஊடக அமையத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு
யாழ் ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகம் இன்றையதினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் இன்று(22) நடைபெற்றபோது புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தலைவர் உரை,செயலாளர் உரை, பொருளாளர் கணக்கறிக்கை வாசித்தல் என்பன இடம்பெற்று புதிய நிர்வாக தெரிவு யாழ் ஊடக அமைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
புதிய நிர்வாக குழு
இதன்போது யாழ் ஊடக அமையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் குமாரசாமி செல்வகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், செயலாளராக சி.நிதர்சனும் பொருளாளராக க.கம்சனனும் அதனை தொடர்ந்து, உப தலைவர் , உப செயலாளர் தெரிவை அடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். ஊடக அமையமானது, 10 ஆண்டுகளை கடந்து 11ஆவது ஆண்டில் கால் பதிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
