இலங்கையில் யூடியூப் மற்றும் முகநூலை கட்டுப்படுத்த புதிய சட்டம் - செய்திகளின் தொகுப்பு (video)
இலங்கையில் யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (06.01.2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,இலங்கையில் செய்தித்தாள்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு சட்டங்கள் இருந்தாலும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அவ்வாறான சட்ட கட்டமைப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri
