அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டம் ஆபத்தானது:முரளிதரன் எச்சரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டம் மிகவும் ஆபத்தானது என்று சமூக செயற்பாட்டாளர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் மாசி மாதம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிறது.
பயங்கரவாத தடை சட்டம்
இது தற்போது இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை விட மிக மோசமான சட்டமாகவே காணப்படுகிறது.இந்த சட்டம் மக்களுடைய பார்வைக்காக வெளியிடப்பட்டு நீதி அமைச்சால் மக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இந்த சட்டம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் மூன்று பேர் ஜனாதிபதி ,நீதி அரசர்,பாதுகாப்பு அமைச்சர்.இவர்களைத் தவிர வேறு யாரும் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது.
ஆகவே இந்த சட்டம் மிக மோசமான ஒரு சட்டமாகவே காணப்படுகிறது. 400 பக்கங்களைக் கொண்ட இந்த சட்டம் மிக மோசமாக காணப்படுகிறது.
அரசாங்கத்தை விமர்சிக்க தடை
நாங்கள் ஒரு ஊடக சந்திப்பை கூட செய்ய முடியாத நிலைமை இந்த சட்டத்தில் காணப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கையில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.

இந்த அரசாங்கம் போராட்டங்கள் ஊடாகத்தான் ஆட்சியை கைப்பற்றியது.அந்த நிலை தன்னுடைய அரசாங்கத்திற்கும் ஏற்படும் எனத் தெரிந்துதான் இவ்வாறு ஒரு பயங்கரமான சட்டத்தை கொண்டு வருகிறது.
அரசாங்கத்தை விமர்சிக்க தடை ஏற்படுத்தி அரசாங்கத்தை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக நான் கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.