சவூதி- குவைத் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு இதயம் (Heart) இமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை சவூதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளது.
அதன்படி குவைத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனையும், 2,000 தினார் (இலங்கை ரூபாவில் சுமார் 20 இலட்சம்) அபராதமும் விதிக்கப்படும்.
இதே போன்று, சவூதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 இலட்சம் ரியால் ( இலங்கை ரூபாவில் சுமார் 84 இலட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
தொடர்ந்து இதனைச் செய்தால் அபராதம் 3 இலட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு இமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன.
சிறைத் தண்டனை
அதில் முக்கியமானது இதயம் இமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த இமோஜியை பயன்படுத்துவதுண்டு.
இந்த நிலையில், இந்த இதயம் இமோஜியை அறிமுகமில்லாத பெண்கள் அல்லது பாலியல் ரீதியான நோக்கில் வேறு ஒருவருகோ அனுப்பினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசு இயற்றியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
