டெல்டா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்! வீட்டில் இருப்பவர்களுக்கும் ஆபத்து
இலங்கையில் டெல்டா மாறுபாடு மிகவும் வேமாக பரவுவதனால் வீட்டிற்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்குமாறு ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வீட்டின் கழிப்பறை, குளியலறை பயன்படுத்தும் போது ஒருவர் பயன்படுத்தி 15 நிமிடங்களின் பின்னர் மற்றுமொருவர் பயன்படுத்தினால் வைரஸ் தொற்ற வாய்ப்புகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றுமொருவரிடம் தொற்றுவதற்கு 15 நொடி என்ற மிக சிறிய காலப்பகுதியே தேவைப்படுகின்றது. முகக் கவசத்தை 15 நொடிகள் நீக்குவதனாலும் ஒருவர் தொற்றாளராக முடியும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் இதுவரையில் மீண்டும் டெல்டா தொற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. உங்களுக்கு சிறு பிள்ளைகள் இருந்தால் வீட்டில் இருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டாம். வீட்டில் மிகவும் அவதானமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வெளியாட்கள் வீட்டிற்குள் வருவதற்கு இடமளிக்க வேண்டாம். சிறுவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
