வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் தொடர்பில் புதிய ஆளுநர் வெளியிட்ட தகவல்!
வடக்கு மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்ததாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பள்ளிககார தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஜீவன் தியாகராஜா இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இக் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முதல் முதலில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் கடற்படை மற்றும் விமானப்படை உதவி மற்றும் இராணுவத்தினருடன் ஒன்றிணைந்து ஒரு சந்திப்பினை மேற்கொண்டார்.
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு, பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் செயற்பாடுகள் மற்றும் இங்கே குழுக்களிடையே வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
குறிப்பாக கடல் பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும் ஆராய்ந்தார். அதனை எவ்வாறு கடற்படையின் உதவியுடன் தடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்ததோடு இந்தப் பிரதேசங்களில் இந்தியாவிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பில் கடற்படையினரின் தகவல் வழங்கப்பட்டால் எவ்வாறு அதனை தடுத்து நிறுத்த முடியும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்வதில் தற்போது உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். கைது செய்யப்படும் போது பொருளோடு தொடர்புடையவர்களை சார்பான சிறைச்சாலையில் புனர்வாழ்வு அளிக்க முடியுமா? யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள நிலைமைகள் போதைப்பொருள் ஒரு தொடர்புடையவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்தார்.
இதேவேளை, சமூக பாதுகாப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் இந்த குழுக்களுக்கிடையிலான வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் அத்தோடு ஏனைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்திருந்தார்.
தற்போது இளைஞர் யுவதிகளுக்கு வேலையற்று உள்ளவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி அவர்களுக்குரிய வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சுடன் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி அவர்களை விசேட வேலைத் திட்டத்தின் கீழ் உள்ளடக்குவதற்கான திட்டத்தையும் தான் செயற்படுத்தாகவும் ஆளுநர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சமூக ஊடங்களில் வெளிவரும் சில செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பிலும் அதனை தடுத்து நிறுத்துதல் மற்றும்அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் சில திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், அத்தோடு தடைசெய்யப்பட்ட அநாவசியமான செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடல் போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடியுள்ளார்.
அப்போது நாங்கள் கூறினோம் எமக்கு மொழி பிரச்சினை ஒன்று காணப்படுகின்றது. எமக்கு தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது. எனவே அதற்கு தமிழ் பொலிசார் எமக்கு அதிகமாகத் தேவைப்படுவது தொடர்பிலும் கோரிக்கை விடுத்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
