முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அ.உமாமகேஸ்வரன் பொறுப்பேற்றார் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
இன்றைய தினம் (09.07.2023) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தனது கடமையினை ஆரம்பித்துள்ளார்.
பல உயர்பதவிகளை வகித்தவர்
அருளானந்தம் உமாமகேஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையினை பொறுப்பேற்க முன்னர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அரச பணியில் பல உயர்பதவிகளை வகித்துள்ளார்.
ஆரம்பக் கல்வியினை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையிலும், இடைநிலை கல்வியினை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்று, வர்த்தக பிரிவில் அதி சிறப்புச் சித்தி பெற்று உயர்கல்வியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தில் தொடர்ந்து, முதுநிலை கல்வியினை கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
