வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் நீக்கம்
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாகவும், இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல், நிதி, பொருளாதார மேலாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முன்பு இறக்குமதி செய்யப்பட்டு, ஆனால் ஏதேனும் காரணங்களால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹைபிரிட் Hybrid வகை மோட்டார் வாகனங்களை தற்போது விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத
முந்தைய மாதம் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவிக்க முடியவில்லை என இலங்கை வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
புதிய வர்த்தமானி காரணமாக Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL போன்ற வாகனங்களை இப்போது துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று இத்தகைய தொழில்நுட்பத்தில் உருவாகும் பிற வாகனங்களுக்கும் இப்போதோடு வெளியேற்ற அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கிடையில், பதிவு செய்யப்படாத புதிய மோட்டார்சைக்கிள் வகை வாகனங்களை இறக்குமதிசெய்வதற்கான தடை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இறக்குமதி உரிமம் பெற்றவர்களால் புதிய மோட்டார்சைக்கிள்கள் இறக்குமதிசெய்ய அனுமதிக்கும் புதிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
