யாழில் புதிய ஆடை வடிவமைப்பு நிலையம் : அங்கஜன் இராமநாதனின் முயற்சி (Photos)
கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் ஆடை வடிவமைப்பு நிலையம் மைத்திரிபால சிறிசேனவால் நேற்று (29.06.2023) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
புதிய வேலைவாய்ப்புக்கள்
கோண்டாவில் பிரதேச யுவதிகளுக்கு வருமானம் தரும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்துக்கு அங்கஜன் இராமநாதன் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில், யாழ்,கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, சர்வமத வழிபாடுகளிலும், சமூக நிகழ்வுகளிலும், பல்வேறுபட்ட சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 8 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
