திருகோணமலையில் கால்நடைகளுக்கு பரவும் புதிய நோய்(Photos)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பகுதியில் தோல் கழலை நோய்த் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கால் நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கந்தளாய், முள்ளிப்பொத்தானை தம்பலகாமம், வான்எல அக்போபுர மற்றும் ரஜஎல பேராறு போன்ற இடங்களில் இந்த நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கால் நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும்,இந்த நோய் தாக்கம் அதிகரித்துள்ள கால்நடைகள் மேய்ச்சலில் நாட்டமின்மையாக இருப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தடுப்பூசிக்கு அதிக விலை
எனினும் பரவி வருகின்ற இந்நோய்க்கு தடுப்பூசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் கால்நடை பண்ணையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அரசாங்கம் இந்த நோய்த்தாக்கத்திற்கு கூடிய விரைவில் ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது? Manithan