வடமாகாண கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் : கடமைகளைப் பொறுப்பேற்றார்
வடமாகாண கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
யாழ். வயாவிளான் மத்தியகல்லூரியின் பழைய மாணவியும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியுமாவார்.
இலங்கை நிர்வாகசேவைக்குத் தெரிவாகி, கொலன்னாவை பிரதேச செயலகத்தில் பணிக்கமர்த்தப்பட்டவர், பின்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து தொடர்ந்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராகவும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இறுதியாக, வடமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் மாகாண உதவி காணி ஆணையாளராக
கடைமையாற்றி வடமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
