இலங்கையின் ஆடைத் தயாரிப்புத் துறையில் புதிய வளர்ச்சி
இலங்கையின் ஆடைத் தயாரிப்புத் துறையில் புதிய வளர்ச்சியாக, SE Apparels நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் 6 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி, ஸ்டார் கார்மென்ட்ஸ் குழுமம் (Star Garments Group) மற்றும் எபிக் குழுமம் ஹொங்கொங் (Epic Group Hong Kong) ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் கூட்டுறவால் உருவானது ஆகும்.
உலகளாவிய ஆடை உற்பத்தியில்
இந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சி மூலம் SE Apparels நிறுவப்பட்டதுடன், இது ஸ்டார் குழுமத்தின் வளர்ச்சி வியூகம் மற்றும் கூட்டுறவில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டு முயற்சியானது, ஆடைகள் உற்பத்தியில் எபிக் குழுமத்தின் பெரிய அளவிலான செயல்பாடு மற்றும் நிர்வாகத் திறன்களை, ஸ்டார் குழுமத்தின் துல்லியமான கைவினைத்திறன், ஆக்கப்பூர்வமான புதுமை மற்றும் ஆடம்பர ஆடைத் தலைமைத்துவத்துடன் ஒருங்கிணைக்கிறது.
இதன் விளைவாக, உலகளாவிய ஆடை உற்பத்தியில் இலங்கையின் நிலை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், SE Apparels நிறுவனம் நிலையான வளர்ச்சி, புதுமை, மற்றும் தரம் ஆகிய பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதுடன், கார்பன் குறைப்பு, வளத் திறன், மற்றும் நெறிமுறை சார்ந்த மூலப் பொருள் கொள்முதல் ஆகியவற்றில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தை அடைவதிலும் கவனம் செலுத்துகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |