க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெப்ரவரி 1ஆம் திகதி விவசாய விஞ்ஞான பரீட்சை மீண்டும் நடைபெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 10ம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளுக்குரிய பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்தது.
புதிய திகதி
விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விவசாய விஞான விஞ்ஞான பரீட்சையின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 01 ஆம் திகதி , காலை 08.30 முதல் 11.40 வரை நடைபெறும் எனவும் முதல் பகுதி பிற்பகல் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri