இலங்கையில் பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய நடைமுறை
இலங்கையில், முதல் தடவையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளமொன்று நிறுவப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இந்த தரவுத்தளம் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கமைய பொலிஸார், கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேரடியாக இந்த தரவுத்தளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் பாதுகாப்பற்ற நிலைகள் தொடர்பில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு நாளாந்தம் 35 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 7,221 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய,சிறுவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 24 மணிநேரமும் இயங்கும் 1929 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri