கணினி குற்றங்கள் தொடர்பான புதிய நடைமுறைகள்: அரசு எடுத்திருக்கும் தீர்மானங்கள்
இலங்கையின் சைபர் பாதுகாப்பிற்கான கணினி குற்றங்கள் சட்டத்தை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சைபர் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான சட்டமான 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டம் காணப்படுகிறது.
இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் (2022) மற்றும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) ஆகியவற்றுடன் இணைந்து அத்துமீறி நுழைதல் (Hacking) மற்றும் தரவு திருட்டு தொடர்பான விவகாரங்களைக் கையாள்கிறது.
எடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள்
குறிப்பாக கடந்த சில நாட்களில் சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய பல சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் குறித்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தேசிய மீளெழுச்சித் திறனை (National Resilience) மேம்படுத்துவதற்காக அரசாங்கம் தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை (2025-2029) நடைமுறைப்படுத்தி வருகிறது.

தற்போது நடைமுறையிலுள்ள பிரதான சட்டக் கட்டமைப்பான 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டமானது கணினி குற்றங்களை வரையறுப்பதுடன் (அத்துமீறி நுழைதல் அனுமதியற்ற பிரவேசம் தரவு திருட்டு) விசாரணை நடைமுறைகளையும் வழங்குகிறது.
தேசிய சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் 2025-2029 ஐ மீளெழுச்சித் திறன் நம்பிக்கை மற்றும் கொள்ளளவு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam