2022ஆம் ஆண்டில் புதிய கோவிட் கொத்தணி நுவரெலியாவில்?
புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து நுவரெலியா முழுவதும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பாரிய அளவில் குவிந்துள்ளமை அவதானிக்க முடிந்துள்ளது.
கடந்த 31ஆம் திகதி இரவு நுவரெலியாவுக்கு பயணித்துள்ள சுற்றுலா பயணிகள் நுவரெலிய சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.
அத்துடன் கிரெகரி ஏரி உட்பட நுவரெலியாவின் பல இடங்களில் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி நேரத்தை செலவிட்டுள்ளனர் .
அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு எதிராக செயற்படுவதனை அவதானிக்க முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் புதிய கோவிட் அலை இம்முறை நுவரெலியாவில் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறான நெருக்கடியான காலப்பகுதியில் சுற்றுலாக்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு பல தடவைகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
