தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய அரசியலமைப்பு! திஸ்ஸ விதாரண வலியுறுத்தல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைய வேண்டும் என ஸ்ரீ லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண (Tissa Vitharana) வலியுறுத்தியுள்ளார்.
புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ள சூழல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
புதிய அரசியலமைப்பு
ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது . புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை துரிதப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
பல தசாப்தகாலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்படுகிறது. இருப்பினும் எந்த அரசாங்கங்களும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கவில்லை.முதலாளித்துவ தரப்பினர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பாரம்பரியமான அரசியல் முறைமைக்கு முடிவுக் கட்டியுள்ளது. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
தமிழர்களின் உரிமை
நாட்டு மக்களின் அரசியல் சிந்தனை மாற்றமடைந்துள்ளது. ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள்.
தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே கடந்த கால தவறுகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக திருத்தியமைக்கப்பட வேண்டும் .அப்போது தான் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என்றும் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |