இலங்கையில் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் : தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது ஆட்சியின் கீழ் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும், இது அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை உள்ளடக்கியிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath ) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(12.06.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு
மேலும், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் தேசிய பிரச்சினைக்கான தீர்வு உடன்படிக்கையுடன் முன்வைக்கப்படும்.
எனினும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என யாழ்ப்பாணத்தில் தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவர் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.
தேசிய பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவருவதில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினருடனும், தமது அரசாங்கம் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரும் என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பு காலாவதியானது எனவே தமது அரசாங்கம் நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |