தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் : சீமான் நடத்திய ஆடு மாடுகள் மாநாடு
நாம் தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் சீமான் நேற்று(10) மதுரையில் ஆடு மாடுகள் மாநாட்டை நடத்தியுள்ளார்.
இது தமிழக அரசியலில்; புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது.
இதன்போது, தமிழக அரசாங்கம் கால்நடைகளுக்கு உரிய இடத்தை வழங்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் நாட்டின் பொருளாதாரம்
எனினும் மது உற்பத்தியை ஊக்குவித்து தாய்மாரின் தாலிகளை அறுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம் என்பதை உணராத வரை, தமிழ் நாட்டின் பொருளாதாரம் வளராது என்றும் சீமான் இந்த மாநாட்டின்போது தெரிவித்துள்ளார்.
இதனை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதியன்று தேனி மலையடிவாரத்தில் தாம் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்போவதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டின்போது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன், ஆடுகளும் மாடுகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |