விரைவில் வட்ஸ்ஸப்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய மாற்றங்கள்
வட்ஸ்ஸப்பில் செயலில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வட்ஸ்ஸப்பில் தனியுரிமை(பிரைவசி) அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வட்ஸ்ஸப்பில் பிரைவசி அம்சங்கள் தொடர்பில் மெட்டா நிறுவனம் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
இம்மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்
இதையடுத்து அவ்வப்போது பிரைவசி அப்டேட் அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகும்போது அந்த தகவலை பிறர் அறியமுடியாத வகையில் புதிய அம்சம் கொண்டுவரப்பட இருக்கிறது.
அதே போல நீங்கள் ஒன்லைனில் இருக்கிறீர்களா என்பதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மார்க் அறிவித்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல், ஒருமுறை மட்டுமே பார்க்கும்படியான செய்திகளை (view once messages) ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாதபடி புதிய அப்டேட்டை அளிக்க இருப்பதாகவும் மார்க் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்புதிய அப்டேட் இந்த மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையின் முதல் கரிநாள்...! 9 மணி நேரம் முன்

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
