தங்காலை நகர சபையின் புதிய தலைவர் பிரதமர் முன்னிலையில் பதவியேற்பு
தங்காலை நகர சபையின் புதிய தலைவராக டபிள்யு .பி.ஆரியதாச, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் இன்று அலரி மாளிகையில் வைத்து பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆலோசகரான ஆரியதாச மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நகரசபை உறுப்பினராகச் சேவையாற்றியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ரவிது வெதஆராச்சி அக்கட்சியினால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக டபிள்யு .பி.ஆரியதாச இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரியதாசவின் பதவியேற்பின் போது விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தங்காலை நகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam