மட்டக்களப்பு- ஆரையம்பதி பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு
மட்டக்களப்பு- மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் பிரசன்னத்தில் சபை மண்டபத்தில் இன்று (07) நடைபெற்றது.
இதன்போது புதிய தவிசாளருக்கான முன்மொழிவினை உள்ளூராட்சி ஆணையாளர் கோரினார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் முன்மொழியப்பட்டார்.
தவிசாளர் தெரிவு
தவிசாளருக்கான வேறு தெரிவுகள் இன்மையால் ஏகமனதாக மண்முனைப்பற்றின் தவிசாளாராக கா.செந்தில்குமார் தெரிவு செய்யப்பட்டார்.
பிரதேச சபையின் உப தவிசாளருக்கான பதவியானது தற்போது வறிதாக்கப்பட்டுள்ளமையினால், மீண்டும் குறித்த பதவிக்கான வெற்றிடத்தினை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் என உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
முன்னர் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் த.மாணிக்கராஜா அண்மையில் காலமாகியதன் காரணமாக இந்த புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் நடவடிக்கை
இந்த புதிய தவிசாளர் தெரிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்யின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் எனக்கும் ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸிற்க்கும் ஏற்பட்ட முக்கியமான விவாதத்தின் பின்னர் ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு எவ்வாறு அமையப்போகின்றது என எதிர்பார்த்திருந்தனர்.
இருப்பினும், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் நன்மைகருதி நான் சாணக்கியமாக முஸ்லிம் காங்கிரசுடன் குறித்த தெரிவில் நடந்துகொண்டதுடன், எதிர்காலத்திலும் கிழக்கு மாகாணத்தில் சிறப்பான புரிந்துணர்வுடன் கூடிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
