இன்றைய தினம் புதிய அமைச்சரவை! - வெளியாகியுள்ள தகவல்
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது பல முன்னாள் அமைச்சர்களும் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சு பதவிகள் மட்டுமே இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் போது பிரதமர் தவிர்ந்து முழு அமைச்சரவையும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam