இலங்கையில் செயற்கை கடற்கரை! மறுக்கப்பட்டுள்ள அனுமதி
கொழும்பு போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செயற்கை கடற்கரைக்கு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி போன்றவற்றில் செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை பார்வையாளர்களுக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று வருகின்றனர்.
இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கை கடற்கரையில் விளையாட்டுக்கள், மற்றும் உணவகங்கள் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அசுத்தப்படுத்தும் மக்கள்
இந்தநிலையில், கடற்கரை திறந்துவைக்கப்பட்ட முதல் நாளில் மோட்டார் சைக்கிள், மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
காலி முகத்திடல் இருந்து குறித்த கடற்கரைக்கு 3 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதன் காரணமாக இந்த வசதி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த இடத்தை அசுத்தப்படுத்தி செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிளில் செயற்கை கடற்கரையை பார்க்க சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |