இலங்கையை உள்ளடக்கி உலக வங்கி மேற்கொண்டுள்ள புதிய நியமனம்
உலக வங்கி, டேவிட் சிஸ்லன் (David Sislen) என்பவரை நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான இயக்குநராக நியமித்துள்ளது.
இதன்படி, காத்மண்டுவில் உள்ள உலக வங்கியின் (World Bank) துணை பிராந்திய அலுவலகத்தில் இருந்து மாலைதீவு மற்றும் இலங்கைக்கான இயக்குநராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
நகர்ப்புற மேம்பாடு
இந்த நியமனத்திற்கு முன், சிஸ்லென் உலக வங்கியில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான நகர்ப்புற மற்றும் பேரிடர் இடர் மேலாண்மைக்கான பயிற்சி மேலாளராக பணியாற்றினார்.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மக்கலெஸ்டர் கல்லூரியில் (அமெரிக்கா) புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் முழுவதும் உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் பரவலாக்கப்பட்ட சேவை வழங்குவதில் விரிவான அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
