புதிய ஊழல் தடுப்புச் சட்டம் குறித்து அரசாங்கத் தரப்புக்கள் கூறும் கருத்து!
புத்தாண்டு முடிந்ததும் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது, அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே தனது விரிவாக்கப்பட்ட நிதி வசதியிலிருந்து ஆரம்பத் தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளதுடன், இலஞ்சம் மற்றும் ஊழலைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையிலேயே புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான மறுவடிவமாக்கப்பட்ட ஆணைக்குழுவின் உயர் மட்டங்களில் பணியாளர்கள் மாற்றப்படவுள்ளனர்.
இது முழுமையாகச் சுயாதீனக் குழுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், உள்ள சர்வதேச குழுக்களின் எதிர்ப்பால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் அது மீண்டும் சீர்திருத்தப்படுமா? என்பது தொடர்பில் அரசாங்கம்
வெளிப்படையான கருத்து எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
