பிரதமரை சந்தித்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் குழுவில் இந்தோனேசியாவிற்கான தூதுவர் எஸ்.எஸ். பிரேமவர்தன, பிரேசிலுக்கான தூதுவர் சி.ஏ.சி.ஐ. கொலொன்னே, மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் எம்.ஆர். ஹசன், துருக்கிக்கான தூதுவர் எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி.பி. கதுருகமுவ, நேபாளத்திற்கான தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, கொரியக் குடியரசுக்கான தூதுவர் எம்.கே. பத்மநாதன் மற்றும் ஓமான் சுல்தானகத்திற்கான தூதுவர் டபிள்யூ.ஏ.கே.எஸ். டி அல்விஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
கலந்துரையாடல்
இலங்கையுடனான நல்லுறவை மேம்படுத்துதல், சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரை உயர்த்துதல், மற்றும் தரமான முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் புதிய தூதுவர் குழுவினருக்குச் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, குறித்த குழுவினர் பொறுப்பேற்க இருக்கும் நாடுகளில் காணப்படும் வாய்ப்புகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட பிரதமர், அவர்களின் எதிர்காலப் பணிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிகச் செயலாளர்சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam