நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Jaffna Northern Province of Sri Lanka Ramalingam Chandrasekar
By Theepan Aug 21, 2026 05:57 AM GMT
Report

நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(20.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை

மேலும் தெரிவிக்கையில், குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் நிதி ஒதுக்கீடு | New Air Conditioned Boat For Neduntheevu

நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடலின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.235 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகவும், சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.652 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது யாழ்ப்பாண மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம்

குறிக்கட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வரும் ‘வடதாரகை’ மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய இரு படகுகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் நிதி ஒதுக்கீடு | New Air Conditioned Boat For Neduntheevu

அதேவேளை, ‘குமுதினி’ படகு திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இ

தன் காரணமாக நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி, நெடுந்தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் கடற்போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

கடற்போக்குவரத்து சேவையில் கடற்படைத் தளபதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிய குளிரூட்டப்பட்ட படகு சேவையை கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம் நெடுந்தீவு மக்களும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பயனடைவார்கள் எனக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

டுபாயில் சிக்கிய ஆபத்தான நபர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

டுபாயில் சிக்கிய ஆபத்தான நபர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்

சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US