இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பீஜிங்கில் உள்ள பெரிய மண்டபத்தில் நேற்று (26.03.2024) நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒத்துழைப்புடன் சமூக, கலாசார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து கொழும்பு நோக்கிய பயணம் : விபத்து சம்பவிப்பதற்கு முன்னர் கப்பலில் ஏற்பட்ட மாற்றங்கள்
ஒரே சீனக் கொள்கை
இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீன பிரதமர் லீ கியாங் உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு 4.2 பில்லியன் டொலர் இருதரப்புக் கடனும், 2.9 பில்லியன் டொலர் வணிகக் கடனும் சீனாவுக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து சீனப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
இலங்கையானது 'ஒரே சீனா' கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் சர்வதேச அரங்குகளில் சீனாவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இலங்கை இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |