தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகம் தெரிவு (Photo)
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் காணப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே நிர்வாக தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி அக்கட்சியின் தலைவராகச் சட்டத்தரணி பரமசிவம் ஸ்ரீதரனும் கட்சியின் செயலாளர் நாயகமாக அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட வீ.ஆனந்தசங்கரியும் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் அக்கட்சியின் மகளிர் பேரவைத் தலைவியாக சூரியமூர்த்தி சூரியபிரதீபா வாசவன் தெரிவுசெய்யப்பட்டார்.
அண்மைக் காலமாகத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பல்வேறு சர்ச்சைகள் நிர்வாகங்களில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்தே இந்த புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் மற்றும் தேசிய மாநாடு என்பவற்றை மிக விரைவில்
நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.