இலங்கையில் எந்த சபாநாயகருக்கும் இதுபோன்று நிகழவில்லை : கருணாகரம் ஜனா சுட்டிக்காட்டு
எந்தவொரு சபா நாயகருக்கும் இது போன்ற ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரும் நிலை உருவாகவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கருணாகரம் ஜனா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“எமது நாட்டின் பதவித்தர அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற பதவிகளுக்கு மூன்றாவது நிலையிலுள்ள பதவி சபாநாயகர் பதவி. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டால் அவர் தான் தெரிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து விலகியவராகவே கருதப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்பார்.
இத்தகைய வெஸ்மினிஸ்டர் சம்பிரதாய பூர்வ பதவியை அவ்வாறே பின்பற்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் சபா நாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது என்பது வெட்கப்பட வேண்டிய விடயமே தவிர ஆளும் தரப்பு பெருமை கொள்ள வேண்டிய விடயம் அல்ல.
சபா நாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டதற்கான உடனடிக் காரணம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமாகும். இந்த சட்டமூலமானது உச்ச நீதிமன்றத்தின் சகல விதப்புரைகளையும் மீறி அரசியலமைப்புக்கு முரணாக அதனை சட்டமூலமாக்கியுள்ளார்.
தென்கிழக்காசியாவின் பெருமை மிகு நாடாளுமன்ற சம்பிரதாயம் கொண்ட நாட்டில் இதுவரையில் இருந்து வந்துள்ள சம்பிரதாயம் இதன் மூலம் முழுவதுமாக மீறப்பட்டுள்ளதுடன் எந்தவொரு சபாநாயருக்கும் இது போன்ற ஒரு நிலை உருவாகவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
