திருகோணமலை நில மீட்புக்கான வலையமைப்பு கலந்துரையாடல்
நில மீட்புக்கான வலையமைப்பு கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது
இக்கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பலராலும் கருத்துக்கள் முன்வைப்பு
இந்த கலந்துரையாடலின்போது திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பாகவும், அபகரிப்புக்களை தடுப்பதற்காகவும் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்கான சட்ட முன்னெடுப்புக்களை ஏற்படுத்தி நிலங்களை மீள பெற்றுகொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்பின்னர் அதற்கான வலையமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
அத்துடன் கலந்து கொண்டோரால் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் நில உரிமை மீறல்தொடர்பாக பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், இதற்கு தீர்வு காணும் செயற்றிட்டங்களையும் உருவாக்கி கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam