ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு திட்டத்தில் திடீர் மாற்றம்.. இரத்து செய்யப்பட்ட முக்கிய நிகழ்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இன்று சந்தித்தார்.
முன்னதாக, இந்த சந்திப்பின் போது இருவரும் சேர்ந்து வெள்ளை மாளிகையில் ஒரு விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னர் அறிவிக்கப்பட்ட விடயம்...
இந்த சந்திப்பில், இஸ்ரேலிய இறக்குமதி பொருட்களுக்கு 17 வீத வரிகளை விதிக்கும் அமெரிக்க முடிவு, காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நமது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் மற்றும் இஸ்ரேல் - துருக்கி உறவுகள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன், சந்திப்பின் பின்னர், இது குறித்த முக்கிய விடயங்களை விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரியபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தற்போது, அந்த விசேட செய்தியாளர் சந்திப்பை இரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
President Donald Trump welcoming Israeli Prime Minister Benjamin Netanyahu to The White House today: pic.twitter.com/6JkR3fYAFq
— AIPAC Tracker (@TrackAIPAC) April 7, 2025
அதேவேளை, இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில் ஒரு சிறிய குழு செய்தியாளர்களிடம் இருந்து கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |