இயேசு கிறிஸ்துவின் சிலையை சேதப்படுத்திய IDF அதிகாரி.. கடும் சீற்றத்தில் நெதன்யாகு
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் கத்தோலிக்க மதச் சிலையை (இயேசு கிறிஸ்துவின் சிலை) சேதப்படுத்திய சம்பவத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் ஒன்றில், இஸ்ரேலிய வீரர் ஒருவர் சம்மட்டியால் இயேசு கிறிஸ்துவின் சிலையைத் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நெதன்யாகுவின் பதிவு..
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நெதன்யாகு, "நானும், இஸ்ரேலியர்களில் பெரும்பான்மையானவர்களும் இந்தச் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.
As the Jewish state, Israel cherishes and upholds the Jewish values of tolerance and mutual respect between Jews and worshippers of all faiths. All religions flourish in our land and we view members of all faiths as equals in building our society and region.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) April 20, 2026
Yesterday, like the…
அனைத்து மதத்தினருக்குமான வழிபாட்டு சுதந்திரத்தை கடைபிடிக்கும் ஒரே மத்திய கிழக்கு நாடு இஸ்ரேல் மட்டுமே. இந்தச் சம்பவத்திற்காகவும், அதனால் ஏற்பட்ட மனவேதனைக்காகவும் நாங்கள் வருந்துகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக இராணுவ அதிகாரிகள் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக, இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி, "இந்தச் செயலில் ஈடுபட்டவர் மீது விரைவான, கடுமையான மற்றும் பகிரங்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam