நேபாள அரசியலில் அதிரடி மாற்றம் : பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் இசைக்கலைஞர்
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் ராப் இசைக்கலைஞரான (Ex-Rapper) பாலன் ஷா (Balen Shah) அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
அண்டை நாடுகளுடனான உறவு
காத்மண்டுவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பான விழாவில், ஜனாதிபதி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் பலத்த சவாலை அளித்து, இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் மக்களின் பேராதரவுடன் ஷா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
நேபாள அரசியலில் ஒரு புதிய தலைமுறைத் தலைவரின் வருகையாக இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக காத்மண்டு மாநகர மேயராகப் பணியாற்றி மக்கள் செல்வாக்கைப் பெற்ற ஷா, தற்போது நாட்டின் உயரிய பதவியை ஏற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
வளைகுடா போர் மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடி நிலவும் இக்கட்டான சூழலில், நேபாளத்தின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது இவருக்கு முன்னால் உள்ள முக்கிய சவால்களாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அவர் எடுக்கப்போகும் அதிரடி முடிவுகளை நேபாள மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri