32 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட தூதரக காணியை மீட்க நேபாளம் நடவடிக்கை
கொழும்பில் தூதரகம் அமைப்பதற்காக 32 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு, அரசாங்கத்தின் அனுமதியின்றி தனியார் நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட காணியை மீண்டும் கைப்பற்றுவதற்கு நேபாள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, தூதரகம் அமைப்பதற்காக கொழும்பு - ராஜகிரிய பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 1989 மே 18 அன்று 360,000 அமெரிக்க டொலர்களுக்கு நேபாள அரசாங்கம் கொள்வனவு செய்தது.
அரச அனுமதி
இந்த காணியில் 1 ஏக்கர் நிலப்பரப்பு, இலங்கைகான நேபாளத்தின் முன்னாள் தூதர் அல்பெர்ட் எதிரிசிங்க என்பவரால் அரசாங்க அனுமதி ஏதுமின்றி 1990 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் இருமுறை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1990 செப்டெம்பரில் 100,000 அமெரிக்க டொலர்களுக்கும், 1994 மே மாதம் 120,000 அமெரிக்க டொலர்களுக்கும்.
இந்த காணி கைமாற்றப்பட்டுள்ளது இந்த நிலையில் 30 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து நேபாள வெளிவிவகார அமைச்சு, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், காணியின் உரிமையை உறுதிப்படுத்தி அதனை பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அதிகாரிகள் நேபாள தூதரகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri