நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மீது மக்கள் பலத்த குற்றச்சாட்டு சங்கம் மறுப்பு..!
கட்டவேலி-நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகளால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கட்டவேலி-நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்
கட்டவேலி-நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிபொருள் நிரப்ப பணம் இன்மை காரணமாகவே பெட்ரோல் கொள்வனவு செய்வதில்லை எனவும், கரவெட்டி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அட்டைக்கு கூட பெட்ரோல் வழங்குவதில்லை.
மேலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் முகாமையாளர் ஆளுமை அற்றவர் என்றும், தனக்கு வேண்டியவர்களுக்கே எரிபொருள் நிரப்புவதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.
மறுப்பு
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பல கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர், எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வங்கிகள் ஊடாகவே மேலதிக கடன் வசதிகள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வங்கியே பெட்ரோலிய
கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தும் பணத்திற்கு பொறுப்பு மற்றும் வாங்கிய
பணத்தையும் செலுத்துகிறது என்று தெரிவித்த அவர் அனைத்து குற்றச்சாட்டுக்களையும்
மறுத்துள்ளார்.