கடும் மோதல் போக்கு! அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஈரானின் திட்டவட்டமான முடிவு
அமெரிக்காவுடனான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான திகதியை நிர்ணயிப்பதில் ஈரான் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான ஒரு 'அடிப்படை கட்டமைப்பு' குறித்து உடன்பாடு ஏற்படும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பில்லை என ஈரானின் துணை வெளி விவகார அமைச்சர் சயீத் காதிப்சாதே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருந்தாலும், சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்படும் எந்தவொரு உடன்பாடும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று காதிப்சாதே வலியுறுத்தினார்.
இரு தரப்பும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு கட்டமைப்பை முதலில் உருவாக்க வேண்டும். அதுவரை பேச்சுவார்த்தைக்கான திகதியை அறிவிப்பதில் அர்த்தமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஈரான் எதிர்பார்க்கிறது.

கடும் மோதல் போக்கு
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட விவகாரம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஒருபுறம் போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் அடிபட்டாலும், மறுபுறம் இத்தகைய நிபந்தனைகள் காரணமாக இராஜதந்திர முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரானின் இந்த நிபந்தனைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே மத்திய கிழக்கின் அமைதி அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri