அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்-உலக செய்திகள்
ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின்னர், இந்த பேச்சுவார்த்தை நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்ய அந்த நாடும், அதற்கு பதிலாக ஈரான் மீதான பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனியும் ஒப்புக்கொண்டு கடந்த 2015ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
எனினும், அதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதனையடுத்து முறியும் நிலையில் உள்ள அந்த ஒப்பந்தத்தை மீட்பதற்காக வியன்னாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.