பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு! பொலிஸ் அதிகாரி காயம்
நீர்கொழும்பு - மீகமுவ பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இருவர் கைது
குறித்த காரை சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டியபோது, அதனை நிறுத்தாது முன்னோக்கிச் செலுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு காரணமாக கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், சம்பவத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில்,, காரினை சோதனை செய்தபோது 500 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri