பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம்! சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைதிகள் மீது பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது உண்மை என்று பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அவர் குறித்த விடயத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
கைதிகளின் உடம்பில் துப்பாக்கிச்சூட்டுக்காயங்கள்
நீர்கொழும்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகளின் உடம்பில் துப்பாக்கிச்சூட்டுக்காயங்கள் ஏராளமாக காணப்படும் அதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்காயங்கள் காரணமாகவே 20 கைதிகள் உயிரிழந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அது தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார,
சிறைக்கைதிகள் முதலில் சிறைக்குள் இருந்த இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவு வழியாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் மரக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தால் ஏற்படக்கூடிய சூழ்நிலையை கட்டுப்படுத்துவதை நினைத்தும் பார்க்க முடியவில்லை.
சிறை வளாகத்தின்படி, இரண்டு பிரதான கதவுகள் உள்ளன. முதலில் இரும்புக்கதவும், பின்னர் மரக்கதவும் உள்ளன. சிறைக்கைதிகள் முதலில் சிறைக்குள் இருந்த இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவு வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.
இந்த மரக்கதவிற்கும் இரும்புக்கதவிற்கும் இடையில் மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன. கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு இந்த மரக் கதவின் வழியாக உள்ளே நுழைந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை என்னால் மதிப்பிட முடியாது.
சிறை அதிகாரிகளின் பாதுகாப்பு
மேலும், இரும்புக்கதவை உடைத்த பிறகு, அவர்கள் அருகிலிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்குவதற்கு தொடங்கினார்கள். சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கைதிகள் தப்பிச்செல்வதை தடுப்பதற்கும் பாதுகாப்புப்படையினரால் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரே நடவடிக்கை துப்பாக்கிச்சூடு தான்.
எனவே, சிறை அதிகாரிகள் இந்த வழியில் செயல்படாமல் இருந்திருந்தால், இது தங்கள் உயிரைப் பணயம் வைத்து மதிப்பிடக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல.சிறை அதிகாரிகள் இந்த வழியில் செயல்படாமல் இருந்திருந்தால், அது ஒரு பெரும் பேரழிவாக இருந்திருக்கக்கூடும்.
மேலும் அந்த நேரத்தில், எங்களது சிறை அதிகாரிகளில் பெரும்பாலோர் கைதிகளுக்கு மத்தியில் உள்ளே சிக்கி அவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகிக்கொண்டிருந்தனர்.
அந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவும் அவர்களை காப்பாற்றவுமே அவர்கள் வளாகத்திற்குள் நுழைந்திருந்தனர். அந்த அதிகாரிகளும் உள்ளே சிக்கியிருந்தனர். அப்போது கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் வேறுவழியின்றி அந்த மரக்கதவின் வழியாக துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 08 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.